புதன், 9 நவம்பர், 2011

காதலி தத்துவங்கள்

heartfunny girl

1.காதல்ல காசு இருந்தாதான் கோட்டா,
இல்லாட்டி உனக்கு டாட்டா....


2.திரிஷா இல்லனா திவ்யா
கார்த்தி இல்லனா மூர்த்தி(டோண்ட் வொர்ரி கேர்ள்ஸ்)

3.காதலிய கவுக்க நீ
எழுதுவ கவித,
காதலி உன்ன கவுக்க கட்டுவா புடவ!!!

4.வெங்காயத்த நீ அறிஞ்சா கண்ணீரு
காதலிக்க தெரிஞ்சா தெளிக்கலாம் பன்னீரு..

5..காதலி கைவிட்டா பைத்தியம்,
காதலியே இல்லனா நீ புன்னியம்


6.காதல காதலிக்கனும்னா
உன் காதலி
அழகா அமைஞ்சிருக்கனும்.

7.நிசமா காதலிச்சா நீ ரொம்ப பழசு,
டைம்பாஸ்க்கு கதலிச்சாத்தான் நீ இளசு.!!!


8.காதல்ல விழுந்துட்டா நீ அப்பாவி
அப்ரம் அவளேதான் உனக்கு சாவி.!!!

9.காதல் வேற, கல்யாணம் வேற
--------புது ரூல்ஸ்-----------

கடைசியா:--
10.எப்பவும் பொய் சொல்ற கவித பிடிக்கும்,
எப்பவாச்சும் பொய் சொல்ற என்ன பிடிக்கலையே உனக்கு.!!!



ஞாயிறு, 30 அக்டோபர், 2011

யாரறிவார் இவள் மனதை?

வரம் ஒன்று தந்தான் 
இறைவன் இலவசமாக 
அழுகையும் கண்ணீரையும் 

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய 
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே 
கனவாகியது எனக்கு.... 

வேதனை என்ற சொல்லுக்கு 
வரை விலக்கணம் தனைக் கூறியது 
கன்னங்களின் ஓரம் 
காய்ந்துபோன கண்ணீர்த்துளி.. 

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால் 
பொன்னகையில் பார்ப்பதை விட 
புன்னகையில் பார்ப்பது என்னை 
பகல் நேர பௌர்ணமிகளாய் 
தோன்றியது சிலருக்கு .... 

எனை நோக்கி அனுதாபம் 
அடைந்த சில நட்புகளை 
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால் 
காயம் கண்ட இதயமதை மீண்டும் 
காயப்படுத்திய உறவுகளை இன்னும் 
ஏற்கவில்லை என் மனம் ஏனோ? 

காலங்களும் கரைந்து சென்றது 
காட்சிகளும் மாறியது 
கனவுகள் போல 
கண்கள் கண்ட கனவுகளும் 
கலைந்து சென்றது 
கார்மேகம் போல... 

மனதில் எழுந்த கேள்விகளுக்கு 
விடை தேடுகின்றேன் 
நான் நாளும்.. 

மனித மனங்களும் மரித்து விட்டது 
இறைவனோ மௌனம் காக்கின்றான் 
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு.... 

பேதை இவள் பேதலிக்கின்றாள் 
வரும் கால வாழ்வை எண்ணி 
யாரறிவார் இவள் மனதை..

செவ்வாய், 25 அக்டோபர், 2011

வாங்க ஒரு கவிதைக்குப் போகலாம்!

ன்பே!
கவிஞர் ரவீந்திரநாத்
தாகூரை
எனக்கு மிகவும் பிடிக்கும்!
ஏன் தெரியுமா?
ரவீந்திரநாத் தாகூர்
உனது பெயரில்
அவர் ஒரு இலக்கியமே
படைத்தார்!
அவருக்கு விருதுகள்
கிடைத்தன!

உன்னை நேசித்த நாள்
முதல் நான் தாகூரையும்
நேசித்தேன்! அவரது
கவிதைகளைத்
தேடித் தேடிப் படித்தேன்!

உனது பெயர்
அவ்வளவு அழகு!
அதை விட நீ ரொம்ப அழகு!!
எனக்கும் உனக்கும்
அது முதல் காதல்!
அதனால் தான்
இருவரும் ஒரு வார்த்தைகூட
பேசவில்லை!

பார்த்துக்கொண்டோம்!
சிரித்துக்கொண்டோம்!
உனது புன்னகையில்
ஏக்கம் இருந்தது!
பார்வையில் காதல்
இருந்தது!
நளினமான உனது நடையில்
பெண்மை இருந்தது!

ஆனால் என்னிடம்தான்
தைரியம் இல்லை!
உன்னோடு வந்து பேச
துணிச்சல் இல்லை!
கல்வி ஒன்றே என்
கண்ணுக்குத்
தெரிந்தது!

நீ கணிதத்தில் வீக்கு!
ஆங்கிலத்தில் புலி!
நானோ கணிதத்தில் புலி!
ஆங்கிலத்தில் வீக்கு!

தப்பாக கணக்குப் போட்டு
நீ மாஸ்டரிடம் ஏச்சு வாங்கும்போது
நான் துடித்துப் போவேன்!
மின்னல் வேகத்தில் கணக்குகள்
செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்!
நீயோ கணக்குடன் மல்லுக் கட்டுவாய்!

அதுபோல, ஆங்கில வகுப்பில்
நீ அசத்திக் காட்டுவாய்!
ஆங்கிலக் கவிதைகள்
உனக்கு அல்வா சாப்பிடுவது போல!
எனக்கோ, அது வேப்பங்காய் போல!

ஒருநாள் கணிதப் பரீட்சை நாள்!
நீ என்னிடம் வந்து கேட்டாய்,
“ உங்கள் மூளையை எனக்கு
இரவல் தாறிங்களா?”
எனக்கோ தலைகால் புரியவில்லை!
நீ பேசிவிட்டாய்! ஆறுமாதங்கள்
வெறும் பார்வையை மட்டுமே
பரிமாறினோம்!
இன்று நீ பேசிவிட்டாய்!

நானும் பதிலுக்குச் சொன்னேன்!
“ ஆங்கிலப் பரீட்சைக்கு உங்களது
மூளையைத் தருவீர்களா?”
நீ புன்னகை செய்தாய்!
வெட்கப்பட்டாய்!
அன்று இருவருமே வானில்
பறந்தோம்!
இந்தப் படத்துக்கும் கவிதைக்கும் யாதொரு சம்மந்தமும் கெடையாது! ஹி ஹி ஹி !

உனது பெயர் வருகிறது
என்பதற்காக டூயற்
படத்தில் அத்தனை
பாடல்களையும் நான்
மனனம் செய்தேன்!
ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு
கடவுளானார்!

பேபிஷாலினியின் ஒரு
திரைப்படத்தை பல முறை
பார்த்தேன்!
சரத்குமாரின் “ பேண்ட் மாஸ்டர்”
படத்தையும் பாடல்களையும்
ரொம்ப ரொம்ப நேசித்தேன்!

உனது பேரையும்
எனது பேரையும்
தாங்கியவாறு
“ நான் அடிமை இல்லை”
படத்தில், ஒரு பாட்டு உண்டு!
அந்தப் பாடலை ஆயிரம்
முறை கேட்டிருப்பேன்!
எஸ்.பி.பாலாவுக்கும் ஜானகிக்கும்
கோயில்கட்ட நினைப்பேன்!

எல்லோருக்கும்
வாழ்வில் முதல்
மறக்க முடியாதது
முதல் காதல்!
எனக்கும் தான்!

காதல் என்றாலே
என்னவென்று தெரியாத
ஒரு கனவுக்காலம்
அது!
நாமும் கனவுகள் கண்டோம்!
கற்பனைகள் செய்தோம்!
காதலை மட்டும் சொல்லவே
இல்லை!

இப்போதும் உன்னை
நினைத்துப் பார்ப்பதில்
எனக்கு ஒரு சுகம் உண்டு!

ம்........ முதல் காதலையும்
முதல் முத்தத்தையும்
மறக்க முடியாது என்பது
உண்மைதான்!

அன்பே! ஒரு சின்ன வேண்டுகோள்!
என்னை விட, குளிர் மிகுந்த
நாட்டில் நீ வாழ்கிறாய்!
குளிரில் இருந்து
பாதுகாப்பாக இரு!

ஹி ஹி ஹி எனக்குத்
தெரியும் உனக்கு குளிர்
அலர்ஜி என்று!

அது சரி, நீ இன்னும் என்னை
மறக்கவில்லைத் தானே!

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நட்பு ஒரு சுமையல்ல

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

ஞாயிறு, 22 மே, 2011

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

வேல்தர்மா
thanks Lankasri

ஊமைகள்
மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்

தாபம்
உணர்வுப் பட்டறையின்
வெப்பம் வெளியே வந்தது
கன்னியவள் மூச்சு

மறுவாழ்வு
வெள்ளாடை விதைவை
பட்டுச் சேலை உடுத்தினாள்
வானவில்

வாழ்க்கை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ


அதிட்டக் கட்டை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ

கொள்கை(ளை)
மகன் சாகட்டும்
மருமகள் தாலி அறட்டும்
இந்திய வெளியுறவுக் கொள்கை

எழும்பியது
பொறுமை இடறி விழுந்தது
இடறு பட்ட மிருகம்
கோபம்

சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்

பெயரென்ன?
பாதுகாப்பு வலயத்தில்
பலியானோர் எண்பதாயிரம்
நாமம் கரணம்

செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்

எங்கே எந்தன் தேவதை

எங்கே எந்தன் தேவதை

த.தர்ஷன்
thanks Lanka sri

எங்கே எந்தன் தேவதை
எங்கே எந்தன் தேவதை
கண்ணில் வந்த நாள் முதல்
கண்ணீர் தந்து பார்க்கிறாள்
எங்கே எந்தன் தேவதை

கண்ணால் பேசினாய் மனசை தீண்டினாய்
காதல் தானடி காதல் தானடி
காதல் வந்ததால் கவியன் ஆகினேன்
கவிதை தானடி கவிதை தானடி

எனக்கென இருந்தது ஒரு நிழலு -அது
உனைக்கண்டு தொடர்ந்தது தெரியாதா?
உனக்கென இருந்தது ஒரு பெயரு -அது
என்னுயிரில் புதைந்தது புரியாதா?

நீ பிரிந்தாலும் மண்ணில் இணைந்தாலும்
எந்தன் உசிரு உன்னை சேருமடி
வானில் தோன்றினாய் வாழ்வை திருடினாய்
இதயம் தானடி இதயம் தானடி

கனவில் பேசியே காலம் கழிக்கிறேன்
நினைவில் தானடி நினைவில் தானடி
உயிரில் உன்முகம் தீட்டுகிறேன்
உதிரமும் அழைப்பது கேட்கிறதா?

ஊர் உன்னை சேர்வதை எதிர்த்தாலும்
உன்னை விட வேறிங்கு இல்லையடி
நீ பறந்தாலும் என்னை மறந்தாலும்
நீ தான் எந்தன் ஒரு நினைவு

தேசக் காதல்

யூலியட் இறக்கவில்லை
நடித்திருந்தாள்.
ரோமியோ அறியவில்லை
இறந்துவிட்டான்.
யூலியட் அறிந்துபின்
இறந்துவிட்டாள்.
“இருவரும் இறக்கவில்லை
விதைக்கப்பட்டார்கள்”
எழுதிவைத்தான் சோக்கிரட்டீஸ்
காதலுக்காய் உயிரைவிடுதல்
காவியம் என்று.

ரோமியோ! யூலியட்!
உருகி வழிகிறது
உலகம் முழுதும்
ஒன்றுக்கு பதிலாய்
பல நூறாயிரமாய்

நாமும் காதலித்தோம்.

இதயச்சுவர்களில்
ஈரமாய் எழுதினோம்.
ஊர்காற்று முழுதும்
ஓலை அனுப்பினோம்.

காது மடல்களில்
கானம் இசைத்தோம்.
மூக்கு முட்டிச்
சுவாசித்தோம்.
இதழ்களால்
இறுகப் பற்றினோம்.
கண்கள் முழுதும்
நிறைத்தோம்.
ஒரு கோப்பையில்
உண்டோம்.

காலடிச் சுவடுகளில்
கால்வைத்து நடந்தோம்.

அவள் ஒளியில்
அவள் தந்த சுகத்தில்
அவள் காட்டிய அரவணைப்பில்
ஆனந்தாமாய் இருந்தோம்.

காதல்..! காதல்…!
இனிதாய்தான் பருகினோம்.

ஆனால்
எங்களை
நிஐமாய் நேசித்தவளை
சாகடிக்கும் போது
நாமும் இறந்துவிட்டோம்.

எங்களுடைய
சாவுக்கு யாரும்
வருத்தப்படவில்லை.

எங்கள் காதலை
காவியமாய்
யாரும் இன்றுவரை எழுதவில்லை.

நாம் இத்தாலியில் பிறக்கவில்லை
எங்கள் வீதிகளில்
வெரோனாவின் வாசம் இல்லை
என்பதாலோ தெரியவில்லை.

வல்லவர்களே!
நீங்கள் ஒட்டிய
பயங்கரவாத முத்திரைகளுடன்
உங்கள் வாசல்களில்
வந்து நிற்கும்
எங்கள் உறவுகள் சொல்லுவார்கள்.
எங்கள் காதலை

ஒருநாள்
உங்களுக்கு
மனச்சாட்சி வந்தால்
அவர்கள் சொல்வதையும்
கேளுங்கள்.

எங்களையும் எழுதுங்கள்.
பெரும் காவியமாய்
அல்லாவிட்டாலும்

நாங்களும் காதலுக்காக
உயிரை விட்ட
மானசீக காதலர்களே!
என்ற
பேர் உண்மையை
உலகம் அறியப்போதுமான
“நாம் பயங்கரவாதிகள் அல்ல”
என்ற
சிறு குறிப்பை மட்டும்...!


ரவி இந்திரன்